Puppy Movie Review

Puppy Movie Review

‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ சார்பில் டாக்டர்.ஐசரி. கே.கணேஷ் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பப்பி’. நட்டு தேவ் எழுதி, இயக்கியுள்ளார்.

இதுவரை சின்ன, சின்ன வேடங்களில் நடித்து வந்த வருண், ஹீரோவாக நடிக்க,. அவருக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார்.

‘பப்பி’ படத்தின் போஸ்டரில் யோகி பாபு, மற்றும் நாய் இடம் பெற்றிருப்பதால் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு காமெடிப்படம் போல் இருக்கிறதே.. என்ற எண்ணம் ஏற்பட்டது. அது உண்மைதானா? பார்க்கலாம்.

இஞ்சினியரிங் கடைசி வருடம் படித்து வருகிறார் வருண். அவருடைய முழு நேர பொழுதுபோக்காக இருப்பது மொபைலில் ஆபாச படம் பார்ப்பதும், விலை மாதர்களிடம் செல்வதும் தான்.

இப்படி அவருடைய கல்லூரி வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது அவருடைய வீட்டிற்கு குடி வருகிறார் சம்யுகதா ஹெக்டே. இது போதாதா வருணுக்கு. எப்படியாவது அவளை மடக்கி விட துடிக்கும் வருண், அவருடைய சீனியர் ‘யோகி’ பாபுவின் ஐடியா படி மடக்கியும் விடுகிறார்.

சில நாட்களில் சம்யுக்தா ஹெக்டேவை, வருண் கர்ப்பாமாக்கி விட்டு அந்த கர்ப்பத்தை கலைக்க தன்னுடைய சீனியர் யோகி பாபுவின் உதவியோடு முயற்சி செய்கிறார்.

இதனிடையே வருண், சம்யுக்தா ஹெக்டே விஷயம் இருவரின் வீட்டிற்கும் தெரிந்து விடுகிறது. அதே சமயத்தில் வருண் வளர்க்கும் பப்பி (நாய்) க்கு பிரசவ வலி ஏற்பட, அதை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்கும்போது வருணுக்கு ஒரு ஞானம் வருகிறது. அது தான் படத்தின் ப்ரி.. க்ளைமாக்ஸ்!,

புதிரான பருவ வயதில் ஆண், பெண் இருவருக்கும் ஏற்படும் தவிர்க்க முடியாத ஈர்ப்பினால் ஏற்படும் விபரீதம் தான் கதை. அழகான இந்தக்கதையை, ஆபாசமாக சொல்லி கதைக்கு சம்பந்தமே இல்லாத யோகி பாபுவின் ஃபுட்பால், ஸ்லம் ஏரியா பசங்க காட்சிகளைச் சேர்த்து அபத்தமாக்கியிருக்கிறார் இயக்குனர் நட்டு தேவ்.

‘யோகி’ பாபு இல்லைன்னா இந்தபடத்தை பார்க்கவே முடியாது.

அது சரி.. யாரெல்லாம்.. பாக்கலாம்ன்னா? அரை, போதைல்ல.. இருக்க எல்லாரும் பாக்கலாம்!

ஷேம்.. ஷேம்.. அரை.. குறை, ‘பப்பி ஷேம்’ படம்!