வெகுநாள் கழித்து திரையில் முகம் காட்டுகிறார்கள் பரத் ,வாணி போஜன் இருவரும்.!
அவர்கள் நடித்து விரைவில் வெளியாகவிருக்கிறது ‘மிரள் ‘ ஹாரர் படம் ! இந்த படத்தின் முதல் பார்வை சுருளை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
ஆக்ஸஸ் பிலிம் பாக்டரி ஜி டில்லிபாபு தயாரித்திருக்கிற இந்த படத்தில் மீரா கிருஷ்ணன், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் தமிழ்த் திரையில் இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்குமாம், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
கதை,திரைக்கதை எழுதி இயக்குகிறார் எம்.சக்திவேல்.