மில்லியன் டாலர் பதிப்பகம், எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் புதிய பயணம் ஆரம்பம்!

திரைத்துறையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க “மில்லியன் டாலர் பப்ளிகேஷன்” தனது பயணத்தை தொடங்குகியிருக்கிறது. இதன் மூலம் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதும், அவற்றை எதிர்காலக் காட்சி ஊடகங்களுக்கான வலுவான அடித்தளமாக மாற்றுவதையும் முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது.

மில்லியன் டாலர் பதிப்பகத்தின் நிறுவனர் யுவராஜ் கணேசன் வழிகாட்டலில், இப்புதிய முன்னெடுப்பைத் திறம்பட வழிநடத்திச் செல்லும் நிர்வாகிகளாக புளியந்தோப்பு மோகன், ஷாஜன் கவிதா, ரேவதி ஆகியோர் செயல்படவுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.