மக்கள் மனங்களை வென்ற “பரியேறும் பெருமாள்” திரைப்படம் பொது சமூகத்தில் உண்டாக்கிய விவாதங்களும், கலை உலகினர் இடையே உண்டாக்கிய உற்சாகமும் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
பல ஊர்களில், பல பாராட்டு விழாக்களின் தொடர்ச்சியாக சென்னையில் “மெய்காண் கலைஞர் தமிழ்ச்சங்கம்” ஏற்பாடு செய்திருந்த மதிப்பாய்வு நிகழ்வில் இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், ராம், அமீர், வ.கௌதமன், மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் பாரதிராஜா,
“ஒன்றை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால், நாம் அவற்றை விட ஒருபடி மேலிருக்கிறவர்களாக இருக்க வேண்டும். அப்படி மாரி செல்வராஜின் “பரியேறும் பெருமாள்” திரைப்பட்த்தை விமர்சிப்பதற்கு அவனைத் தாண்டி ஒருபடி மேலிருக்கிறேன் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.
இந்தப் படம் பார்த்து முடித்ததும் மறுபடியும் மறுபடியும் எனக்கு மாரி செல்வராஜுடைய முகம் தான் வந்து போனது. அவன் மனிதர்களை மட்டும் பட்த்தில் பேச வைக்கவில்லை, அந்த மண்ணையும் பேச வைத்திருக்கிறான். கருப்பி மேல் நம் எல்லோரையும் பாசம் கொள்ளச் செய்திருக்கிறான்.
Kamalhaasan, Mariselvaraj,Pa.Ranjth
அதேபோல, இப்பட்த்தில் வருகிற “நான் யார்?” படலைப் போல ஒன்றை இதுவரை நான் பார்த்ததே இல்லை. இந்த ஒரு பாடல் போதும், மாரி செல்வராஜ் ஒரு அற்புதமான அறிவாளிக் கலைஞன் என்பதைச் சொல்வதற்கு. மேலும் குறிப்பாக யாருடைய மனதையும் புண்படுத்தாமல், ஒரு கீறல் கூட விழாமல் இப்படத்தை எடுத்ததற்காக வாழ்த்துகள்.
இது போதாது, ஒரு மிகப்பெரிய விழா எடுத்து உலக மக்களுக்கெல்லாம் உன்னைப்பற்றிச் சொல்ல வேண்டும்” என்று நெகிழ்ச்சியாக பேசினார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது,
“மாரி செல்வராஜ் ஏற்கனவே ராமிடம் 11 வருடங்கள் இருந்திருந்தாலும், அவருடைய வரவு தமிழ் சினிமாவில் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியிருக்கிறது. இப்படத்தினை தயாரித்ததோடு மட்டுமல்லாமல், கடைகோடி வரை கொண்டு சேர்த்ததிலும் பா.இரஞ்சித்தின் பணி மிகப் பெரியது. தலித் அரசியல் பேசும் சினிமாக்களில் மாரி செல்வராஜ் ஒரு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறார்.
இது ஒரு மிகப்பெரியாக முன்நகர்வாக இருக்கும். கதையாகவும், கதாபாத்திரங்களாகவும், தொழிற்நுட்பமாகவும் முழுமையான ஒரு சினிமாவாக இப்படம் அமைந்திருக்கிறது.
எந்த நெருடலும் இல்லாமல் ஒரு வாழ்க்கையையும், காலத்தையும் கடந்து வருவதற்கு இப்படத்திற்கு இசை பலம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது” என்று பேசினார்.