சினிமாவில் கலக்கி வந்த நடிகை சாக்ஷி அகர்வால், இப்போது பிசினஸ் உலகிற்குள் மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார். தனது பிறந்தநாள் பரிசாக, கடந்த 5 வருடங்களாக செதுக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் பிராண்டை அதிகாரப்பூர்வமாக லான்ச் செய்துள்ளார்.
மத்த பிரபலங்கள் மாதிரி சும்மா ஒரு பிராண்டுக்கு வந்து போட்டோஷூட் பண்ணிட்டுப் போகும் விளம்பரத் தூதர் இல்லீங்க நம்ம சாக்ஷி! தயாரிப்பின் தரம், ஃபார்முலா, பிசினஸ் ஐடியா என எல்லாவற்றிலும் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.
5 வருட நீண்ட ஆராய்ச்சி, இறுதி கட்டத்தில் 11 மாதங்களில் மட்டும் 551 முறை கலவை மாற்றங்கள் செய்து, தனது சொந்த ஃபிட்னஸ் அனுபவங்களை வைத்தே இந்த பிராண்டை உருவாக்கியுள்ளார்.
‘OKUU’ புரோட்டீன் பாரின் ஸ்பெஷல் என்ன?
இது முழுக்க முழுக்க தாவர அடிப்படையிலான (Plant-Based) ஒரு பிரீமியம் புரோட்டீன் பார். உடம்புக்கு கெடுதல் தரும் சர்க்கரை, தேவையற்ற கெமிக்கல்கள், செயற்கை சேர்மங்கள் என எதுவுமே இதில் கிடையாது.ஒரே ஒரு பாரில் 35 கிராம் புரோட்டீன், 14 கிராம் நார்ச்சத்து, 6 கிராம் கொலாஜன் (Collagen) உள்ளது.
‘’கடந்த 5 வருஷமா நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இந்த நிறுவனத்துக்காக முழு மனசோட உழைச்சிருக்கேன். இது சும்மா ஒரு செலிபிரிட்டி பேருக்காக ஆரம்பிச்சது இல்ல. இந்திய மக்களுக்கு பெஸ்ட்டான ஊட்டச்சத்து கிடைக்கணும்னு கொண்டு வந்தது. என் பல வருட கனவு இன்னைக்கு நிஜமாகியிருக்கு!” என எமோஷனலாகப் பேசியுள்ளார் சாக்ஷி.
திரைத்துறையைத் தொடர்ந்து இப்போ நியூட்ரிஷன் துறையிலும் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிச்சிருக்காங்க சாக்ஷி அகர்வால்.