இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ‘ட்ரு விஷன் ஸ்டோரீஸ்’ எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதியான ‘ஹிடன் அஜெண்டாஸ் ஷுட் -ரெடி’ எனும் நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த விழாவில் ‘ஏசியா வில்லே’ எனும் ஊடக நிறுவனத்தின் உரிமையாளரும், மூத்த ஊடகவியலாளருமான சசிகுமார் எழுத்தாளர்கள், அஜித் மேனன்- சுனில் வர்மா, தயாரிப்பாளர்கள் ராம்குமார் கணேசன், திரிநாத் மல்ஹோத்ரா, டி. சிவா, தனஞ்செயன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ட்ரு விஷன் கதைகள் என்பது எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் தொகுத்த, ஆறு தொகுதிகளின் தொகுப்பாகும். இது திரைப்படத்திற்கான ‘ ஹிடன் அஜண்டாஸ் ஷுட் -ரெடி’ எனும் வகையில் இந்திய கதைகளின் புதிய சகாப்தத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
அனார் என்டர்டெயின்மென்ட் மற்றும் பினாக்கிள் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த தொடரின் கதைகளை தழுவி படைப்புகளை உருவாக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கிறது. இவர்களால் எழுதப்பட்டு பிரபலமான ஹிடன் அஜண்டாவின் முதல் நான்கு கதைகள் திரில்லர் வகையிலான தொடர்களாகும்.
இந்த புத்தகத்தை புகழ்பெற்ற சிருஷ்டி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பதிப்பகம் ஆண்டுதோறும் ட்ரு விஷன் ஸ்டோரீஸ் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட ஜானரிலான கதைகளை கொண்டு, கடந்த ஆறு ஆண்டுகளில் 24 தனித்துவமான கதைக் களங்களை வழங்கி இருக்கிறது. இது திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வித்தியாசமான படங்களுக்கான கதை கருவினையும் வழங்கியிருக்கிறது. இந்த தொடரின் ஒவ்வொரு தொகுதியும் ஒரு சினிமாவை வாசிப்பது போன்ற அனுபவத்தை வழங்குவதற்காக நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் இது திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உற்சாகமான கதைகளை தயாரிப்பதற்கும் வழிவகை செய்கிறது.
”ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு பக்கமும் ஒரு சினிமாவை நேரடியாக பார்த்த அனுபவத்தை உணர வைக்கும். இந்த புத்தகம் வாசகர்களுக்கு காட்சி வழியிலான கதை சொல்லலை கொண்டிருக்கிறது” என்கிறார் எழுத்தாளர் அஜித் மேனன்.
இதில் உள்ள கதைகளை தொகுத்திருக்கும் பாடலாசிரியர் அனில் வர்மா குறிப்பிடுகையில், ”எங்கள் நோக்கம் இந்திய பார்வையாளர்களுக்கு திரைப்படம் தொடர்பாக இந்திய கலாச்சாரத்தை ஆழமாக எதிரொலிக்க கூடிய உள்ளடக்கத்தை உருவாக்குவதே ஆகும் ” என்கிறார்.
ட்ரு விஷன் கதைகளுடன் அஜித் மேனனும், அனில் வர்மாவும் 2023 ஆம் ஆண்டில் தொடங்கிய ‘தி பாந்தர்’ஸ் கோஸ்ட்’ எனும் புத்தகத் தொடரின் வெற்றியை இதிலும் தொடர்கிறார்கள். மேலும் இந்த ஆண்டின் வாசிக்கக்கூடிய.. வாசிக்க வேண்டிய சிறந்த 15 புத்தகங்களில்.. இரண்டு சிறந்த விற்பனையான தொகுதிகளுடன்… இந்திய இலக்கியம் மற்றும் சினிமாவின் இவர்களது தாக்கம் குறித்து ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது புத்தகம் ஜனவரி 2025 ஆம் ஆண்டில் வெளியாகிறது.