ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், உருவாகும் புதிய படம் “BP180”. இப்படத்தின் படப்பிடிப்பு, இன்று பூஜையுடன் துவங்கியது. இதில், டேனியல் பாலாஜி, தான்யா ரவிச்சந்திரன், டேனியல் பாலாஜி, K.பாக்யராஜ், தமிழ், அருள் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ‘BP180’, திரைப்படத்தில், நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்து வருகிறார். நடிகர் டேனியல் பாலாஜி, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.