தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா! – நற்பணியில் நடிகர் துரை சுதாகர்.

தமிழர்களின் சிறப்பை பாருக்கு பறைசாற்றும் பல அடையாளங்கள் இன்றுவரை விண்னைத் தொட்டு விஞ்சி நிற்கிறது. அப்படி விண்ணைத்தொட்டு நிற்கும் அடையாளங்களில் ஒன்று, மாமன்னன் ராஜராஜ  சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்.

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக உலக விஞ்ஞாணம் வியக்கும் வகையில் கம்பீரமாக உயர்ந்து நின்று  தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. அத்தகைய புகழ்பெற்ற இக் கோவிலின் கும்பாபிஷேகம்  24 ஆண்டுகளுக்குப் பிறகு  வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

தஞ்சை மண்ணில் தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் இக்கோவில் அமைந்திருக்கும் ஊரில் பிறந்த பலர், தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக அரசியல், கலை, சினிமா, தொழில்த்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.

இசைத் துறைக்கு எம்.கே. தியாகராஜ பாகவதரை கொடுத்த தஞ்சை, நடிப்புக்கு சிவாஜி கணேசனை கொடுத்தது.  நடிகைகள் டி.ஆர்.ராஜகுமாரி, ஹேமாமாலினி என்று தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்தி சினிமாவிலும் வெற்றிக் கொடி நாட்டிய இவர்களும் தஞ்சையை சேர்ந்தவர்கள் தான்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், நடிகர் ராஜேஷ், நடிகர் விஜயகுமார், இயக்குநர் ஷங்கர் என்று அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழ் சினிமாவில் ஜாம்பவனாக திகழ்பவர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். தஞ்சை மண்ணில் பிறந்தவர்களுக்கு கலை என்பது ரத்தத்தில் கலந்த ஒன்றாகும்.

அந்த வகையில் பிற துறையில் ஈடுபட்டாலும், கலைத்துறையில் கால் வைத்துவிடுகிறார்கள். சமீபத்தில்  தஞ்சையை சேர்ந்த தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான துரை சுதாகர், நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தால்  ‘களவாணி 2’ படத்தின் மூலம்  வில்லனாக அறிமுகமாகி திரைத்துறையினரின் பாராட்டு பெற்றார். பல படங்களில் நடித்து வரும் இவர் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் பல நற்பணி உதவிகளை செய்து வருகிறார்.