கடைசி நேரத்தில் சந்திராயன் – 2 விண்கலம் ஏவுவது நிறுத்தி வைப்பு!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து (ஜூலை 15) இன்று அதிகாலையில் 2.51 மணிக்கு சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் சந்திராயன் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சந்திராயன் 2 விண்கலம் ஏவப்படுவதற்கு 55 நிமிடங்களுக்கு முன்னதாக இன்று திடீரென கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட ட்விட்டர் செய்தி குறிப்பில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சந்திராயன்2 விண்ணில் ஏவப்படும் புதிய தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படுவதாக அச்செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.