அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருப்பவர் இயக்குனர் சுப்ரமணியம் சிவா. இவர் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘திருடா திருடி’.
இந்த படத்தில் தனுஷுக்கு கதாநாயகி அறிமுகமானவர் நடிகை சாயா சிங். இந்தப்படத்தில் இடம்பெற்ற ’மன்மத ராசா’ பாடலில் இருவரும் போட்ட குத்தாட்டம் மூலை முடுக்களில்லெல்லாம் பிரபலமானது. தனுஷூக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்தது.
நடிகை சாயா சிங்கிற்கும் நடித்த முதல் தமிழ் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதனைத்தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, பெங்காலி என பல மொழிகளில் நடித்து பிரபலமானார்.
ஆனால் தமிழ் சினிமாவில் அவருக்கு கதாநாயகிக்கான வாய்ப்புகள் வரவில்லை. பதிலாக திருப்பாச்சி, அருள் போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு மட்டுமே குத்தாட்டம் போட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஆனந்தபுரத்து வீடு’ என்ற திகில் படத்தில் நடித்தவர், அந்த படத்தில் நடித்த நடிகரான கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
சினிமாவில் வாய்ப்பு அறவே இல்லாததால், சாயா சிங் கன்னடா, தமிழ், தெலுங்கு என பல மொழி சீரியல்களில் நடித்து வந்தார். இந்நிலையில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ’பூவே உனக்காக’ என்ற சீரியலில் வில்லி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். குத்தாட்டம் போட்ட சாயாசிங், வில்லியாக நடித்து பெண்களின் மனம் கவர இருக்கிறார்.