கொற்றவை – தமிழர்களின் சுவாரஷ்யமான வரலாறு – இயக்குனர் சிவி.குமார்

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை 2013 ஆண்டு மதுரையில் பாய்ந்து வரும், வைகை நதி கரையின் இரு புரங்களிலும் ஒரு தொல்லியல் ஆய்வை தொடங்கினர். இதில் அவர்கள் வியக்கதக்க அணிகலன்கள், ஆயுதங்கள் என, பல அரிய பொக்கிஷங்கள் உட்பட நமது முன்னோர்களின் 90 வாழ்விடங்களையும் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடதக்கது.

இந்த செய்திகளுடன் கொஞ்சம் கற்பனை கலந்து அகன்ட திரையில், விஷுவல், சவுண்ட் எஃபெக்ட்சில் பார்த்தால் எப்படி யிருக்கும். சூப்பராயிருக்குமல்லவா! அதைத்தான் இயக்குனர் சி.வி.குமாரின் ‘கொற்றவை: தி லெகசி’ படக்குழு நமக்கு விருந்து படைக்கவிருக்கிறது.

‘இது கதையல்ல, 2 ஆயிரம் வருட நம்பிக்கை’ என்று டீசரில் இடம் பெற்ற  அந்த வசனம் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

கதை என்னவென்றால்.., UPSC  பயிற்சியாளராக இருக்கும் தொல்பொருள் ஆய்வாளர் வடிவு (படத்தின் கதாநாயகி சந்தனா ராஜ் ), ஒரு புதையலை தேடிச்செல்கிறார். அப்போது,  பல சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவர் புதயலை தேடி ஏன் சென்றார். அவருக்கும் புதையலுக்கும் என்ன தொடர்பு? என்பது தான் பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள, ‘கொற்றவை’ படத்தின் கதை. என்று  இயக்குனர் சி வி குமார் கூறுகிறார்.

Producer, Director CV Kumar

மேலும் அவர் கூறும்போது…

‘சினிமா துறைக்கு வந்தபோது சரித்திரப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது . இப்பொழுது அந்த ஆசை நிறைவேறியுள்ளது. கொற்றவையின் முதல் பகுதி ஒரு ஆரம்பம் மட்டும் தான். 70 சதவிகிதம் சமகாலமாகவும் 30 சதவிகிதம் வரலாற்று பின்னணியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் முழுக்க சாகசம் நிறைந்தவையாக இருக்கும்,” என்றார்.

படத்தின் கதாநாயகன் ராஜேஷ் கனகசபை கூறுகையில், “படப்பிடிப்பின் முதல் நாளில் இருந்தே ஒரு அச்சம் கலந்த சுவாரசியம் இருந்தது. இந்த அனுபவம் எனக்கு புதிதாக இருந்தது. இரண்டாம் பாகம் இதை விட பிரமாண்டமாக இருக்கும் என்றும், அதற்கு இன்னும் அதிக உழைப்பு தேவைப்படும் என்று இயக்குநர் கூறியுள்ளார்.  இரண்டாம் பாகத்திற்கு மனதளவில் தயாராக இருக்கிறேன்,” என்றார்.

மயில் பிலிம்ஸ் டாக்டர் கே பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு எழுத்தாளர் தமிழ்மகன் வசனம் எழுதியுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

பிரமாண்ட பொருட்செலவில் மூன்று பாகங்களாக தயாராகி வரும் இப்படம் குறிப்பிட்ட இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகவுள்ளது. ‘கொற்றவை: தி லெகசி’ என்று பெயரிடப்பட்டுள்ள  முதல் பாகத்தின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.