பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் தயாரித்து வரும் திரைப்படம், ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்.’ இத்திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்த்ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன், பிபின், மறைந்த ஷிஹான் ஹுசைனி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட ‘டிமான்ட்டி காலனி-II’ மாபெரும் வெற்றி அடைந்தது. சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படம், வரும் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனையொட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. திரைப்பட குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முதலாவதாக படத்தின் கதாநாயகன் நடிகர் வைபவ் பேசும்பொழுது,
” இத்திரைப்படத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரு கலகலப்பான திரைப்படம். இயக்குனர்கள் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேஷவ் ஆகிய இருவரும் இத்திரைப்படத்தை சிறப்பாக கொடுத்துள்ளார்கள். தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் அமெரிக்காவில் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர். அவரது தொண்டு நிறுவனம் சார்பில் பல நல்ல விஷயங்களை செய்கிறார். வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ அவர்களுக்கும் மிக்க நன்றி. இமான், சக நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இத்திரைப்படம் துவக்கம் முதல் மிகவும் நகைச்சுவை விருந்தாக இருக்கும். ஜூன் 20-ஆம் தேதி படம் வெளியாகிறது. ஊடக நண்பர்களும் ரசிகர்களும் தங்களது ஆதரவை தருமாறு கேட்டு கொள்கிறேன்” என்றார்.
நடிகை அதுல்யா பேசும்பொழுது,
“ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படம் படப்பிடிப்பு நடக்கும்போதே கலகலப்பாக உருவாகியது. அதேபோல படம் முழுவதும் நகைச்சுவையாக இருக்கும். படம் ஜூன் 20-ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் கண்டுகளித்து ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். பிடிஜி யுனிவர்சல் தயாரிப்பில் எனக்கு இது முதல் திரைப்படம் தயாரிப்பாளருக்கும், நல்ல கதாபாத்திரம் அளித்த இயக்குனர்களுக்கும் எனது நன்றிகள். தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மிக்க நன்றி”, என பேசினார்.
நடிகர் மணிகண்டா ராஜேஷ் பேசும்பொழுது,
வைபவுடன் சேர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நடிகர் மணிகண்டா ராஜேஷ் பேசும் பொழுது,”எனக்கு இத்திரைப்படம் மூலம் நல்ல கதாபாத்திரம் கிடைத்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். ஜாலியான திரில்லர் மற்றும் ஜாலியான சண்டைக் காட்சிகளுடன் வைபவ் மற்றும் மூத்த கலைஞர்களுடன் நடித்ததை ஒரு பாக்கியமாக கருதுகிறேன். எனக்கு வாய்ப்பளித்த மனோஜ் பெனோ மற்றும் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் அவர்களுக்கும், அதிக ஒத்துழைப்பு அளித்த இயக்குனர்களுக்கும் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.
நடிகர் சாம்ஸ் பேசும்பொழுது,
படத்தில் பிபின் குமாருடன் இணைந்து கலக்கியுள்ள நடிகர் சாம்ஸ் பேசும் பொழுது,” நல்ல தரமான படைப்புகளை தமிழ்த் திரையுலகுக்கு அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் படத்தயாரிப்பில் பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கண்டிப்பாக மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுக்கும். அந்நிறுவனத்தின உரிமையாளர் பாபி பாலச்சந்திரன் மற்றும் வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ ஆகிய இருவருக்கும் மிக்க நன்றி. இரட்டை இயக்குனர்கள் இருவரும் முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை கட்டுக்கோப்பாக கையாண்டு சிறப்பாக பணியாற்றி ஜாலியான ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் தமிழ்த்திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது. என்னுடன் பணியாற்றிய சக கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.
நடிகர் ஜான் விஜய் பேசும்பொழுது,
நடிகர் ஜான் விஜய் பேசும்பொழுது,” நடிகர் மற்றும் வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனியின் மாணவன் நான். அவரின் கடைசிப் படத்தில் அவருடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம். இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் அளித்துள்ளார். வைபவ், அதுல்யா, மணிகண்டா ராஜேஷ் ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். என்னுடன் நடித்த சக கலைஞர்களுடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என முடித்தார்.
நடிகை சூர்யா கணபதி பேசும்பொழுது,
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சூர்யா கணபதி பேசும்பொழுது,” சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் கண்டிப்பாக பேசப்படும்படி இருக்கும். இந்த வாய்ப்பளித்த விக்ரம் ராஜேஷ்வருக்கு நன்றி. வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ அவர்களை நீண்ட நாட்களாக தெரியும். அவருக்கும் படப்பிடிப்பில் நான் மகிழ்ச்சியாக உணர வைத்த சக நடிகர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் பேசும்பொழுது,
இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் பேசும்பொழுது,”எட்டு வருடங்களுக்கு முன் இப்படத்தின் கதையை மனோஜ் பெனோ அவர்களிடம் கூறினேன்; எட்டு வருடங்களுக்குப் பிறகும் கூட என்மீது நம்பிக்கை வைத்து பாபி பாலச்சந்திரனின் பிடிஜி யுனிவர்சல் சார்பில் இப்படத்தை தயாரித்தது எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது. படத்தின் கதை எழுதும்போதே வைபவ் தான் கதாநாயகன் என்று முடிவெடுத்து விட்டேன்; அதேபோல தமிழ் தெரிந்த கதாநாயகி வேண்டும் என்பதால் அதுல்யாவை தேர்ந்தெடுத்தோம். அதே போல இசையமைப்பாளர் இமானும் நானும் பள்ளிக்காலத் தோழர்கள், அவர் இந்த படத்தில் பணியாற்றியது கனவு பலித்தது போன்று இருந்தது. மேலும் மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது 5 படங்களில் பணியாற்றியது போல இருந்தது. தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தனர். படத்தயாரிப்புக் குழுவுக்கும் உதவி இயக்குனர்களுக்கும் மிக்க நன்றி” என நிறைவு செய்தார்.