மனித வாழ்க்கையில் ஒருவர் மீது ஒருவர் பொறாமைபடுவது இயல்பு. அது மிகத்தீவிரமாக இருந்தால் என்ன ஆகும். அதைத்தான் நகைச்சுவை ஃபேன்டஸியாக படமாக்கியிருக்கிறார்கள்.
வித்தியாசமான உச்சபச்ச மனநிலை கொண்ட ஒரு கிராமத்தினர் தனது சொந்த பந்தங்களுக்குள்ளேயே செய்வினை, பில்லி, சூனியம் போன்ற மாந்திரீகங்களை செய்து வருகின்றனர். இது அவர்களுக்குள்ளே பலிக்குப் பலியாக நடந்து வருகிறது.
அவர்களின் இந்த மாந்திரீக சேட்டைகளுக்கு முடிவுகட்ட கதாநாயகன் கார்த்திகேயன் வேலு, அதிக சக்திபடைத்த மந்திரவாதிகள் இருக்கும் ஒரு மலை கிராமத்திற்கு செல்கிறார். அங்கே அழகுப் பதுமையாக இருக்கும் சஞ்சனா பர்லியை பார்த்தவுடன் காதலில் கிறங்குகிறார். காதல் கைகூடியதா? ஊர்க்காரர்களின் சேட்டைக்கு முடிவு கட்டினாரா? என்பது தான் ‘சூ மந்திரகாளி’யின் கதை.
திரைக்கதையில் தடுமாற்றம் இல்லாமல் நகைச்சுவையை மட்டுமே பிரதானமாக கொண்டு வெற்றிபெற்றுள்ளனர். பட்ஜெட் பெரிதாக இருந்திருந்தால் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும்.
படத்தில் நடித்திருந்த அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். குறிப்பாக இரண்டு சிறுமிகள் மற்றும் பெண் வேடமிட்டு நடித்திருக்கும் நடிகர் கிஷோர் தேவ் ஆகியோர்களை சொல்லலாம். அதிலும் கோவனத்துடன் வித்திசயாசமாக நடக்கும் ஒருவர் வெடிச்சிரிப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.
பல காட்சிகளில் ‘அமெச்சூர்னெஸ்’. இருந்தாலும், ஒகே!