நடுவன் – விமர்சனம்

பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த், ஜேப்பி, அருவி பாலா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடித்திருக்க, இயக்கியிருக்கிறார் ஷாரங். Sony Liv OTT யில் வெளியாகியிருக்கிறது.

நண்பர்களான பரத்தும், கோகுல் ஆனந்தும் சேர்ந்து கொடைகானலில் தேயிலைத் தொழிற்சாலையை நடத்தி வருகின்றனர். இதில் பரத் தன்னுடைய மனைவியையும், குழந்தையையும் கவனிக்க நேரமில்லாமல் எந்நேரமும் தொழிற்சாலையிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால், பரத்தின் நண்பரனான கோகுல் ஆனந்தோ சதா சர்வகாலமும் குடித்துக்கொண்டே இருக்கிறார்.

ஒருநாள் தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்யும் சிறுவன் பரத்தின் மனைவிக்கும் அவரது நண்பர் கோகுல் ஆனந்துக்கும் இருக்கும் தவறான உறவினை பார்த்து, அதை பரத்திடம் கூறுகிறான். இதனால் ஆத்திரம் அடையும் பரத் என்ன செய்தார்? என்பது தான் படத்தின் கதை.

முதல் காட்சி, கொடைக்கானல் பின்னணியில் ஒரு திகில் கதையோடு ஆரம்பிப்பது போல் இருக்கிறது. ஆனால் அடுத்தடுத்த காட்சிகள் சலிப்பு ஏற்படுத்துகிறது. பழைய கதை என்றாலும் திரைக்கதையில் சற்று சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம்.

கதாநாயகன், கதாநாயகி, வில்லன் உள்ளிட்ட யாரையுமே குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி நடித்திருக்கிறார்கள். இயக்குனர் இதைத்தான் விரும்பினாரா? தெரியவில்லை!

சேனலுக்கு நாலு கள்ளக்காதல், வாரத்துக்கு ஒரு கிளைமாக்ஸ் கொடுக்கும் சீரியல்களை பார்த்துவரும் மக்களுக்கு இது பிடிக்குமா என்பது சந்தேகமே!