சுந்தர் சியின் அடுத்த காமெடி தர்பார் விரைவில்!

குஷ்புவின் ‘அவ்னி சினி மேக்ஸ்’  , ‘பென்ஸ் மீடியா’  நிறுவனங்கள்  இணைந்து தயாரித்துள்ள படம், காஃபி வித் காதல். இதில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ,மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா , யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி) நடித்துள்ளனர். ஆல் டைம் எண்டெர்டெயின் இயக்குனர் சுந்தர் சி இயக்கியிருக்கிறார்.

காஃபி வித் காதல் படத்தினில் மூன்று ஜோடி நடிகர், நடிகையர் நடித்துள்ளதால் இப்படத்தில் 8 பாடல்கள் இடம் பெறுகிறதாம். முகம் சுழிக்காத கிளாமரை அப்படியே அள்ளிக்கொடுப்பதில் வல்லவர், இயக்குனர் சுந்தர்.சி. அதேபோல் காமெடியிலும் அதிக கவனம் செலுத்துபவர். பல்வேறு கவலைகளுடன் தியேட்டருக்கு வருபவர்களை மகிழ்விக்கும் வித்தை தெரிந்தவர். இவரது படத்தினை குடும்பமாகவும் ரசிக்கமுடியும்.

அந்த வகையில்’காபி வித் காதல்’  படமும் அனைவரையும் மகிழ்விக்கும் விதமாகவே இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் வரும் ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.