தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்”.

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்பட அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும், மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த திரைப்படம் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. புத்தம் புது வகையில் உருவாக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ, இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச தளங்களிலும், அற்புதமான தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

இதில் பெரும் ஆச்சர்யம் என்னவென்றால் வெறும் 24 மணி நேரத்தில் 5.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற, கோலிவுட்டின் முதல் அறிவிப்பு வீடியோவாக ‘கேப்டன் மில்லர்’ புதிய சாதனையைப் படைத்துள்ளது என்பது மிகவும் சுவாரஸ்யமான விஷயம். ‘கேப்டன் மில்லர்’ படம் மொழி எல்லைகளை கடந்து, அனைத்து திரை ரசிகர்களிடமும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹர், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இப்படம் காவியமாக இருக்கப்போகிறது’ என அறிப்பு வீடியோவினை பாராட்டி பதிவிட்டுள்ளார். தவிர, நாடு முழுவதும் உள்ள பல முன்னணி திரைப்பட இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நடிகர்கள் இந்த அறிவிப்பு வீடியோவினை பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். நாடு முழுதும் இந்த வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தனுஷ் ட்வீட் செய்த அறிவிப்பு வீடியோ ட்விட்டரில் 2 மில்லியன் பார்வைகளையும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பிரமாண்டமான வரவேற்பும், எல்லா இடங்களிலிருந்தும் மனதைத் தொடும் பாராட்டுக்களும், ‘கேப்டன் மில்லர்’ படத்தினை இப்போதே அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியத் திரைப்படமாக மாற்றியுள்ளது.

“கேப்டன் மில்லர்” படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.