தனுஷ் செய்த ‘2’ கரெக்‌ஷன்! ஒகே.. சொன்ன மாரி செல்வராஜ்!

இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவியாளரான மாரி செல்வராஜ் தன்னுடைய முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஏகோபித்த பாராட்டை பெற்றார். அதையடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் அனைத்து தரப்பினரையும் கவரவில்லை! மேலும் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் வெற்றி பெற்றது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’, விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மீண்டும் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது.

மாரி செல்வராஜின் கதையை கேட்ட தனுஷ் ,சில பில்டப்புகளையும், சில சர்ச்சைகளையும் நிராகரித்ததோடு  முக்கியமான 2 கரெக்‌ஷன்களை செய்யச் சொல்லியிருக்கிறார். அந்த கரெக்‌ஷன்களை செய்துவிட்டு மீண்டும் தனுஷை சந்தித்தார் மாரி செல்வராஜ்.

மீண்டும் கதையை கேட்டு ஓகே சொன்ன  தனுஷ், அடுத்த கட்ட வேலையை தொடங்குமாறு மாரி செல்வராஜிடம் கூறியிருக்கிறார்

மாரி செல்வராஜ் – தனுஷ் இணையும் இந்தப்படம், தனுஷ் இயக்கி, நடிக்கும் படத்திற்கு பிறகு தொடங்கவுள்ளது!