‘டிக்கிலோனா’ ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது!

சந்தானம், யோகிபாபு, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அனகா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ள படம் ‘டிக்கிலோனா’. இதில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர். கார்த்திக் யோகி இயக்குகிறார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிற டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக இன்று முடிவடைந்துள்ளது அடுத்தகட்டமாக ஒரு சில நாட்களில் இசை அமைப்பாளார் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையை தொடங்கவிருக்கிறார்.படத்தின் அடுத்தடுத்த போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடக்கவுள்ளது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.