விஜயை முத்தமிட்ட, விஜய்சேதுபதி!

vijay sethupathi kissing vijay

கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘கைதி’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி வருகிறார். விஜய்க்கு வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதியுடன் நடிகை மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது விஜய்க்கு விஜய்சேதுபதி தன்னுடைய ஸ்டைலில் முத்தம் கொடுத்ததாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி பரவியது. இதையடுத்து இருவரின் ரசிகர்களும் அந்த புகைப்படத்தை பார்க்க ஆவலாக இருந்தனர். இந்நிலையில் தற்போது விஜய்க்கு, விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இன்றுடன் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தொடங்கவுள்ளன.