‘சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் புகழ் பெற்ற இயக்குனராக இருந்து வருபவர், இயக்குநர் பாலா. தற்போது சூர்யா கதாநாயகனாக நடித்துவரும் படத்தினை இயக்கி வருகிறார். இதற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இயக்குநர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் பலரது முன்னிலையில் வெகு விமர்சையாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக மனைவியை பிரிந்த நிலையில் வாழ்ந்து வந்த பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் 5.3.2022 அன்று விவாகரத்து பெற்றிருக்கிறார்கள்.
பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த நிலையில் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்துள்ளனர்.