தியேட்டர்களை உலுக்கி எடுத்த’திரௌபதி’வசூல் மழை!

Draupathi box office collection

பிரபலமானவர்களின் பொய் பரப்புரை இல்லை பிரபலமான ஹீரோ இல்லை. ஜிகினா விளம்பரங்கள் இல்லை. இப்படி எதுவுமே இல்லாமல் சுமார் 50 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட படம் திரௌபதி. வெளியிட்ட அனைத்து இடங்களிலும் வசூல் மழை பெய்து வருகிறது.

சென்னை தவிர பிற மாவட்டங்களில் பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளது. புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி , தேனி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் ரசிகர்களின் கூட்டத்தால் வழிந்தது.

திரௌபதி வெளியான முதல் நாளில் கிடைத்த வரவேற்பு திரையரங்கு உரிமையாளர்களை திக்கு, முக்காட வைத்திருக்கிறது. பெரிய நடிகர்களின் முதல் ஷோவிற்கு கிடைக்கும் வரவேற்பை விட சற்று ஏறக்குறைய கிடைத்துள்ளது. முதல் நாளில் இந்தப்படத்தின் வசூல் 2 கோடியே 50 லட்சம்.

குறிப்பாக வட மாவட்டங்களில், உள்ள கிராமங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்..