பாரம்பரியமிக்க நிறுவனத் தயாரிப்பில் நடிக்கும் ‘பாகுபலி’ பிரபாஸ்!

Baahubali Prabhas signed a trilingual film

‘பாகுபலி’படத்தின் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நாயகன் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தை ‘மஹாநடி’ படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் நாக் அஷ்வின் இயக்குகிறார். இந்திய திரையுலகில் 50 ஆண்டுகால பாரம்பரிய மிக்க ‘வைஜயந்தி மூவிஸ்’ தயாரிக்கவுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மும்மொழித் திரைப்படமாக உருவாகவுள்ளது.

‘வைஜயந்தி மூவிஸ்’  நடிகர்கள் என் டி ஆர், கிருஷ்ணா, சிரஞ்சீவி, சோபன் பாபு, கிருஷ்ணம் ராஜூ உள்ளிட்ட ஜாம்பவான்கள் நடிப்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. மேலும்  இந்நிறுவனம், ஜூனியர் என் டி ஆர், மகேஷ் பாபு, ராம் சரண், நாரா ரோஹித் மற்றும் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல கதாநாயகர்களையும் அறிமுகப்படுத்தியது குறிப்பிடதக்கது.