பான் இந்திய படம் ‘ஸ்ரீ ஸ்ரீ’ : துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் மெலடி சாங் ‘வானே வானே’ ரிலீஸ்!

முன்னணி நட்சத்திரமான துல்கர் சல்மான், அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 41-வது திரைப்படமான ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எஸ் எல் வி சினிமாஸ் (SLV Cinemas) சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி மற்றும் இணை தயாரிப்பாளர் இஷான் சக்சேனா தயாரிக்கும் இத்திரைப்படம், காதல், நகைச்சுவை நிறைந்த ஒரு புத்துணர்ச்சியான காவியமாகத் தயாராகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே ரசிகர்களின் மனதை வென்ற நிலையில், தற்போது ‘வானே வானே’ (Vaane Vaane) எனும் இதமான முதல் காதல் பாடலை வெளியிட்டுப் படக்குழுவினர் இசைப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த அழகிய மாண்டேஜ் பாடல், ரயில் நிலையத்தின் இருக்கையில் அமர்ந்திருக்கும் துல்கர் சல்மான், நடைமேடைக்கு வரும் பூஜா ஹெக்டேவைக் கண்டு மெய்மறக்கும் காட்சியுடன் தொடங்குகிறது.

இசை அமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் மனதை மயக்கும் மெல்லிசையை வழங்க, பாடலாசிரியர் கே. ஆர். தரன் காதலின் உணர்வுகளைக் கவித்துவமாக விவரித்துள்ளார். பின்னணி பாடகர் நகுல் அபயங்கர் தனது இனிமையான குரலால் இப்பாடலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, ராம் மாஸ்டரின் நடன அமைப்பும் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இப்பாடலின் மிகப்பெரிய சிறப்பம்சமே துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே இடையேயான கச்சிதமான மற்றும் வசீகரமான காதல் கெமிஸ்ட்ரி தான். அழகான இடங்களில் பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புடன் படமாக்கப்பட்டுள்ள இப்பாடல், அடுத்த ‘வைரல் ஹிட்’டாக மாறுவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. பான் இந்திய (Pan-India) திரைப்படமாகப் பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டுள்ள ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.