டெல்லியை காப்பாற்ற மின்சார பேருந்துகள் இயக்கம்!

இந்திய நகரங்களில் அதிக அளவு காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நகரம் டெல்லி.

டெல்லியை சுற்றி அமைந்துள்ள தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம், அண்டை மாநிலங்களில் இருந்து எரிக்கப்படும் விவசாய கழிவு ஆகியவை காரணமாக காற்றின் தரம் தொடர்ந்து மிகவும் மோசமடைந்து வருகிறது.

இதனால் பலர் சுவாச சம்பந்தமான நோயால் இறந்து வருகின்றனர். இந்நிலை தொடருமானால் டெல்லி, மக்கள் வாழத்தகுதியில்லாத இடமாக மாறும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிப்பதை தடுக்கும் விதமாக  இன்று முதல் 25 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த மின்சாரப் பேருந்துகள் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி மெட்ரோ பயண அட்டை உள்ள பயணிகள் குறிப்பிட்ட வழிதடங்களில் மட்டும் இதனை பயன்படுத்த முடியும்.  வழியில் யாரும் இந்த பேருந்தில் ஏறி இறங்க முடியாது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு வழித்தடங்களிலும் மின்சாரபேருந்துகள் விரைவில் அறிமுகபடுத்தப்படவுள்ளது.