‘ஃபயர்’ – விமர்சனம்!

பிசியோதெரபி டாக்டர் பாலாஜி முருகதாஸ் காணவில்லை, என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் அளிக்கிறார்கள். அந்த புகாரின் பேரில் விசாரணை செய்கிறார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜே எஸ் கே. அப்போது பாலாஜி முருகதாஸ் பல இளம் பெண்களிடம் உதவி செய்வது போல் நெருக்கமாக பழகி, அவர்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி, அவர்களை தனது இஷ்டம் போல் ஆட்டுவிக்கிறார். அவருக்கு பக்க பலமாக அரசியல்வாதிகளும் செயல்படுவது தெரிய வருகிறது.  காணாமல் போன அவரை போலீஸ் கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பதே ‘ஃபயர்’ படத்தின் கதை.

காசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலாஜி முருகதாஸ், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

பாலாஜி முருகதாஸால் ஏமாற்றப்படும் அப்பாவி பெண்களாக ரச்சிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தாராள கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்கள். இதில், ரச்சிதா மகாலட்சுமி ஒரு படி மேலே சென்று கவர்ச்சி காட்டியிருக்கிறார். பாலாஜி முருகதாஸூடன் மழையில் நனைந்தபடி, உடலை காட்டி நடித்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.

மொத்ததில் ரச்சிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷான் ஆகியோர் கவர்ச்சி காட்டி,  போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

‘ஃபயர்’ படத்தை தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் ஜே.எஸ்.கே, சரவணன் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து சொதப்பியிருக்கிறார். விறுவிறுப்பாக செயல்பட வேண்டிய கதாபாத்திரத்தை சொதப்பலாக செய்து, படத்தின் ஆகப்பெரும் பலவீனமாக  இருக்கிறார்.

ஜே.எஸ்.கே-வின் நடிப்பு மட்டுமின்றி, திரைக்கதையும் விறுவிறுப்பின்றி இருக்கிறது. இயக்குநராக நடிகைகளின் கவர்ச்சி மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்திருப்பாரோ, தெரியவில்லை!

சிங்கம் புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்கரவர்த்தி, அனு விக்னேஷ், பேபி மனோஜ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கட்டுப்பாடின்றி நடித்திருக்கிறார்கள். அவர்களின் நடிப்பு ஓவர் டோசாக இருக்கிறது.

இசையமைப்பாளர் டீகே-வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே.

ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜி-யின் கேமரா, ஆபாச காட்சிகளை அட்டகாசமாக படமாக்கியிருக்கிறது. படுக்கையறை காட்சிகளை பார்வையாளர்களை சூடேற்றுகிறது.

படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம்குமார், ஆபாச காட்சிகளை ஸ்லோமோஷனில் நகரும்படியாக அமைத்திருக்கிறார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பெண்கள் எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், என்பதற்கான காட்சிகளே இல்லை. மாறாக ஆபாசம் மட்டுமே முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கிறது.

விழிப்புணர்வு என்ற பெயரில் ஜே.எஸ்.கே எழுதி இயக்கியிருக்கும் ‘ஃபயர்’ திரைப்படம், அது பற்றி பேசாமல், முழுக்க முழுக்க ‘காமம்’ பிடித்த ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில், ‘ஃபயர்’ காமப் பிரியர்களுக்கானது!