2 மணி நேரம் 3 நிமிடம் 30 விநாடிகள் SINGLE SHOT -ல் ‘ அகடம்’ என்ற திரைப்படத்தை எடுத்து “கின்னஸ் உலக சாதனை” படைத்த இயக்குனர் “இசாக்” கடைசியாக பிக் பாஸ் புகழ் “ஆரி அர்ஜுனை” வைத்து ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார், மீண்டும் புதிய முயற்சியாக 12 மணி நேரத்தில் திரைக்கதை ஒன்றை எழுதி அதை இயக்கியும் இருக்கிறார்.
இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் இசாக் கூறுகையில் இந்த படத்திற்கு 181 என்று தலைப்பு வைத்துள்ளோம் இது முழுக்க முழுக்க HORROR படம் என்றாலும்,இது பெண்களுக்கான படம், பெண்களின் மீது நடக்கும் பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தில் சமீபத்தில் தமிழக மக்களின் மனதை உருக்கிய ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைக்கதையை எழுதி எடுத்திருக்கின்றோம் என்றார்.
இந்த திரைப்படத்தை சாய் ராஜ் ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பாக பி. பி. எஸ். ஈச குகா தயாரிக்க புதுமுகங்கள் ஜெமினி, ரீனா கிருஷ்ணன், விஜய் சந்துரு மற்றும் பலர் நடித்துள்ளனர், இப்படத்தின் ஒளிப்பதிவு- பிரசாத், படத்தொகுப்பு S. -தேவராஜ், கலை -மணிமொழியான் ராமதுரை, சண்டை பயிற்சி -கோட்டி ,மக்கள் தொடர்பு – செல்வரகு மேலும் இலங்கையின் “தேசிய விருது” பெற்ற இசை அமைப்பாளர் ஷமீல்.ஜே இசையமைக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் lலுக் (Title Look) போஸ்ட்டரை பிக் பாஸ் டைட்டில் வின்னர் நடிகர் ஆரி தீபாவளி இன்று வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது