கல்தா – விமர்சனம்

Galtha Movie Review

நாளிதழ்களில் அவ்வபோது இடம்பெறும் ஒரு செய்தியினை படமாக்கியிருக்கிறார்கள். அதாவது கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவக்கழிவுகள் வள்ளியூரில் கொட்டப்படுவதாக தினசரிகளில் வந்த செய்தியின் அடிப்படையில், மனித உரிமை ஆனையம் சூமோட்டோ வழக்கு ஒன்றை பதிவு செய்தது குறிப்பிடதக்கது. இதை அடிப்படையாக வைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா/

இப்படத்தில் கல்லூரி மாணவராக சிவா நிஷாந்த்,’மேற்குத்தொடர்ச்சி மலை’ ஆண்டனி இருவரும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பயங்கரமான தொற்று நோய்கள் ஏற்படுத்தும் மருத்துவ, மாமிச கழிவுகளால் மக்கள் பாதிக்கப்படுவதை தட்டிகேட்கும் இவர்களை அரசியல்வாதிகள் தங்களது வழக்கமான பானியில் போட்டுத்தள்ளுவது தான் படத்தின் க்ளைமாக்ஸ்!

சிவா நிஷாந்தும், ஆண்டனியும் தங்களின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்களா?  இல்லை. ஏதோ நடித்திருக்கிறார்கள். அனைத்து கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் முன்னுக்கு பின் முரணாக அமைக்கப்பட்டிருக்கிறது. கதாநாயகி ஐரா, மற்றொரு கதாநாயகி திவ்யா  இருவரில் ஒருவர் பாடலுக்காகவும் இன்னொருவர் சாகடிக்கவும் பயண்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் மூன்றும் மூன்று திசையிலிருந்து இம்சை கொடுக்கிறது.

விழிப்புணர்வு அதிகம் தேவைப்படும் மக்கள் எதிர்கொண்டுவரும் ஒரு முக்கியமான பிரச்சனையை படமாக்குவதற்கு ஒரு தனி திறமை வேண்டும். இயக்குனர் ஹரி உத்ராவிடம் அது இல்லை.

மொத்தத்தில், ரசிகர்களுக்கு ‘கல்தா’கொடுத்துள்ளார் ஹரி உத்ரா!