பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் திரௌபதி!

ரிஷி ரிச்சர்ட், ருத்ர பிரபாகரனாகவும், ஷீலா ராஜ்குமார் திரௌபதியாகவும் நடித்துள்ள படம், திரௌபதி. நேற்று வெளியான இந்தப்படம் வெகு சிறப்பான வரவேற்பை பாக்ஸ் ஆபிஸில் பெற்றுள்ளது. திரையிட்ட அனைத்து ஊர்களிலும் இந்தப்படம் முதல் காட்சியில் 70 சதவிகதமும் அதன்பின்னர் அடுத்தடுத்த காட்சிகளுக்கு 80 முதல் 85 சதவிதமும் டிக்கெட்டுகள் விற்றுள்ளன.

திருநெல்வேலியிலுள்ள ராம் முத்துராம் திரையரங்கில் ரஜினியின் ‘தர்பார்’ படத்திற்கு பிறகு ‘திரௌபதி’க்கு தான் தியேட்டர் நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்படை பல ஊர்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரௌபதி ஓடிக்கொண்டிருக்கிறது.

சிறிய பட்ஜெட்டில் வெளியாகி மாபெரும் கலெக்‌ஷனை அள்ளிய படங்களில் ‘திரௌபதி’ முக்கிய இடத்தை பிடிக்கும் என்கிறது விநியோகஸ்தர் தரப்பு.