சந்தானம் படத்தில் நடிகரானார் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்!

Harbhajan Singh in Santhanam’s next film ‘Dikkiloona’

இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் படத்திற்கு ‘டிக்கிலோனா’ என பெயரிடப்பட்டுள்ளது.

‘கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்’ சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும்,’ சோல்ஜர் பேக்டரி’ சார்பில் சினிஸும்  இப்படத்தை தயாரிக்கின்றனர்

பல வெற்றிப் படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார்.

‘டிக்கிலோனா’ படத்தில் நடிகர் சந்தானத்துடன் நடிகராக ஹர்பஜன் சிங்கும் இப்படத்தில் இணைகிறார். யுவங்சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற இருக்கிறது. நான்கு பாடல்களும் வெவ்வேறு கேட்டகிரியில் அசத்துவதுடன், இயக்குநர் கார்த்திக் யோகியின் திரைக்கதையும், அவரது  நேர்த்தியான இயக்கமும் ரசிகர்களின் கலகலப்பிற்கு பெரு விருந்து படைக்கும் என்கிறார்கள்.