இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இந்தப்படமாவது வெளியாகுமா?

Actress Chandini signs consecutive projects with Balaji Sakthivel and Radha Mohan

‘காதல்’, ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களையும், திரையுலகினரையும் ஆச்சர்யபடுத்தியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.

தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ படத்தில் நடித்து அனைவரின் பாராட்டினையும் பெற்றார்.

சித்து +2  படத்தில், இயக்குனர் கே. பாக்யராஜ் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை சாந்தினிக்கு இன்னும் வெற்றி என்பது எட்டாத இலக்காகவே இருந்து வருகிறது. இவரின் தாராள கவர்ச்சியால் கூட வெற்றியை எட்டிபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் வெளியான ‘ராஜா ரங்குஸ்கி’ படம் வரை தன்னுடைய திறமைகளை தளராமல் வெளிப்படுத்தி வருகிறார்.

‘ரா… ரா… ராஜசேகர்’, ‘யார் இவர்கள்’ ஆகிய படங்களை இயக்கி முடித்த பாலாஜி சக்திவேல் அந்தப்படங்கள் இன்னும் வெளிவராத நிலையில் புதுமுக ஹீரோ, சாந்தினி நடித்த ஒரு படத்தையும் அவர் இயக்கி முடித்துள்ளார்.

பாலாஜி சக்திவேலின் இந்தப்படமாவது வெளிவருமா?

இந்நிலையில் நடிகை சாந்தினி ராதாமோகன் இயக்கத்தில்  எஸ்.ஜே.சூர்யா – இணையும் திரைப்படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.