‘இறுகப்பற்று’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

பொடன்ஷியல் ஸ்டூடியோஸ், தயாரிப்பில் வித்தியாசமான ‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘டாணாக்காரன்’ போன்ற படங்களின் வரிசையில், ‘இறுகப்பற்று’வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.

‘இறுகப்பற்று’ படத்தினை எலி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்குகியுள்ளார். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திருமணமான தம்பதிகளுக்கிடையேயான புரிதலைப் பற்றிய, உறவுகளின் சிக்கலைப் பற்றி பேசும் படமாக இருக்கும். உணர்ச்சிகரமான, அழுத்தமான படைப்பாக இருக்கும். இயக்குநர் யுவராஜின் திரைக்கதை நிச்சயமாக பார்வையாளர்களுக்கு, குறிப்பாக ஜோடிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்” என தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.

‘இறுகப்பற்று’ செப்டம்பர் மாதம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.