‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!

பிரசாந்த் பாண்டியராஜ் ​ மற்றும் விக்னேஷ் நடராஜன் இருவரும் கதை, திரைக்கதை, வசனம்  எழுதியிருக்க, இயக்கியிருக்கிறார்,  விக்னேஷ் நடராஜன். இதில், பிரசாந்த் பாண்டியராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவருடன் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள் தாஸ், அருள் ஜோதி, சாயாதேவி, நம்ரிதா, மீனா, கௌசல்யா, வையாபுரி, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘சிவன் பிக்சர்ஸ்’, ‘எஸ் ஸ்டுடியோஸ்’ சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், பி விஷால், பி எம் ஆதிஸ்வர் ஆகியோர் தயாரித்துள்ளனர். பின்னணி இசை, சாம் சிஎஸ். ஒளிப்பதிவு,– அசோக் குமார். எடிட்டிங், ஆர் ராமர். ‘வாரண்ட்’ இணையத்தொடர், ​ மே மாதம் 23 ஆம் தேதியிலிருந்து Z​EE 5 தமிழில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.

ரிட்டயர்டு ஹெட்மாஸ்டர் பாலாஜி சக்திவேலின் ஒரே மகன், பிரசாந்த் பாண்டியராஜ். அரசாங்க வேலைக்காக அனைத்து போட்டித் தேர்வுகளையும் எழுதி வருகிறார். தேர்வுகளின் முடிவு தோல்வியிலேயே முடிய, தாய் மாமன் துனையுடன் போலீஸ் தேர்வு எழுதி, கமிஷனரின் ரெக்கமென்டேஷனுடன் வேலையில் சேருகிறார். புதிதாக காவல் நிலையத்தில் சேரும் அவரை, அங்கிருப்பவர்கள் யாரும் மதிப்பதில்லை. மாறாக அவரை ஸ்டேஷனின் எடுபிடியாக பாவிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வாரண்ட் கேஸ் கொடுக்கப்படுகிறது. அதில் குளறுபடிகள் செய்து ஜட்ஜிடம் மொத்த போலீஸூம் மாட்டிக்கொண்டு பாடுபடுகிறது. இதனிடையே கைதி ஒருவர் தப்பி ஓட கடும் சிக்கலில், மிகுந்த மன உளைச்சலுடன் இருந்து வருகிறார். கைதிகளிடம் கடுமையான போக்கினை கையாள்வதோடு, அவர்களை அடித்து நொறுக்குகிறார். போலீஸ் ஸ்டேஷனில் தனக்கான அங்கீகாரத்தை தானே உருவாக்கிக்கொள்கிறார்கொரு நாள் கைதிகளுடன் கடுமையாக நடந்து கொள்ளும் போது, ஒரு கைதி இறந்து போகிறார். அவர் மட்டுமில்லாது மொத்த ஸ்டேஷனும் மாட்டிக்கொள்கிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பதை, பரபரபாக, போலீஸ் பாணியில் சொல்வது தான், வாரண்ட்.

விறுவிறுப்பான 8 பகுதிகளைக்கொண்ட இந்தத்தொடர், ரசிக்கும்படியாக உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பு. ஒரு சில தொடர்கள் தொய்வை ஏற்படுத்தினாலும் மொத்த்மாக பார்க்கும் போது ஓகே வாகத்தான் இருக்கிறது.  போலீஸ் ஸ்டேஷனின் நடைமுறைகள் அனைத்தும் அப்படியே படமாக்கப்பட்டிருப்பது, இந்த தொடரின் பெரிய வெற்றி.

அப்பிரானியாக வந்த ஒரு போலீஸ்காரர், எப்படி உருமாறுகிறார் என்பதை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார், பிரசாந்த் பாண்டியராஜ்.

நாயகிகளாக நடித்திருக்கும் அருள்ஜோதி, நம்ரிதா, சாயா தேவி ஆகிய மூருமே குறிப்பிடத்தக்க வகையில் நடித்துள்ளனர். இருந்தாலும் நர்சாக நடித்திருக்கும் நம்ரிதாவும், விலை மாதுவாக நடித்த சாயா தேவியும் சிறப்பு கவனம் பெறுகின்றனர்.

பிரசாந்த் பாண்டியராஜின் பெற்றோர்களாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், கெளசல்யா இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். ஆஸ்பிடல் சீன் மிகவும் சிறப்பாக இருக்கிறது. மற்றபடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், ஏட்டையா ஹலோ கந்தசாமி, என அனைவருமே குறை சொல்லமுடியாத நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

அசோக் குமாரின் ஒளிப்பதிவு, சாம்.சிஎஸ்-ன் பின்னணி இசை, ஆர் ராமரின் எடிட்டிங் ஆகியன திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளது. தூங்கிகொண்டிருக்கும் அக்யூஸ்ட்டை, மிகுந்த சிரமப்பட்டு பிடிப்பது,  கல்யான வீடு, கோர்ட்டுக்கு லாரியில் வருவது, சாப்பிடுவது உள்ளிட்ட காட்சிகள் ரசிக்கும்படி இல்லை. அதீதமான வசைச்சொல். இப்படி சில குறைகள் இருந்தாலும் ‘வாரண்ட்’ ரசிக்கும்படியான க்ரைம் ட்ராமா!