தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஐசரி கே.கணேஷ் தீபாவளி பரிசு!

வேல்ஸ் பல்கலைக்கழக அதிபர் திரு ஐசரி கணேஷ் அவர்கள் வேட்டி, சேலை, இனிப்பு முதலிய அடங்கிய பரிசு பையை சங்க உறுப்பினர்களுக்கு வழங்கினார். இந்த கொரோன கால கட்டத்தில் இதுவரை அனைத்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவித்தொகையை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தியது நாம்  அனைவரும் அறிந்ததே,

மேலும் சங்க உறுப்பினர்களின் பென்ஷன் தொகை தனது தந்தையார் பெயரால் வழங்கி வருவது சுமார் 20 ஆண்டு காலமாக இதுவரையிலும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளின் கல்வி உதவித்தொகை, இலவச கல்வி என பலப்பல உதவிகளை செய்துவரும் ஐசரி கே கணேஷ் அவர்கள் எந்த பாகுபாடும்  இல்லாமல் இந்த கொரோனா சூழ்நிலையிலும் தானே முன்வந்து இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சென்னையில் உள்ள சங்க உறுப்பினர்கள் மற்றும் எல்லா மாவட்டங்களில்லும் உள்ள கலைஞர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுதோடு இல்லாமல் பண்டிகை கால நல உதவிகளையும் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிகவும் அருமையாக செய்து வருகிறார்.