தமிழில் திரைப்படங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று வருவது நம் தமிழ் திரைப்படத் துறைக்கான பெருமைகளில் ஒன்று. அதன் வழியில் அமுதவாணன் இயக்கத்தின் கோட்டா திரைப்படம் இப்படியான சமூக அங்கீகாரத்தைப் பெற்று, இதுவரை 43 சர்வதேச விருதுகளை குவித்து அசத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டா படத்தின் திரைக்கதையை மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் எழுதி இயக்கியுள்ளார் அமுதவாணன். ஜி தமிழ் ஜுனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் வின்னர் பவாஸ், அதே நிகழ்ச்சியின் மற்றொரு வின்னர் நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கேமராமேனாக படத்தின் இயக்குநர் அமுதவாணன் மற்றும் கவாஸ்கர் ராஜு அற்புதமாக பணியாற்றியுள்ளனர். இசையை ஆலன் செபாஸ்டின் மற்றும் எடிட்டிங் பொறுப்பை வினோத் ஸ்ரீதர் மிகச்சிறப்பாக செய்துள்ளனர். படத்தின் கதைபோலவே அதன் டெக்னிக்கல் டீமும் மிகச்சிறப்பாக களம் இறங்கியிருப்பதால் படம் கமர்சியலாகவும் தடம் பதிக்கும் என்பது உறுதி.
இப்படம் நமக்கு நல்ல அனுபவத்தை வழங்க, வரும் தீபாவளி அன்று திரையில் வெளியாக தயாராக இருக்கிறது.
சர்வதேச அளவில் தன் தடத்தை மிக அழுத்தமாகப் பதித்து பல அங்கீகாரங்களைப் பெற்ற திரைப்படங்களை நம் தமிழ் ரசிகர்கள் கை கொடுக்க என்றும் மறப்பதில்லை. என்பது குறிப்பிடதக்கது.