மம்முட்டியுடன் இணைந்த ஐஸ்வர்யா மேனன்!

அன்மையில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற, பான் இண்டியா படமான ‘ஸ்பை’சூப்பர் ஹிட் அடித்த வகையில் ஆந்திராவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியிருக்கிறார், ஐஸ்வர்யா மேனன். இவர் கார்த்திகேயா, நிகில் சித்தார்த்தா உட்பட தெலுங்கின் முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து பிசியாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து, மம்முட்டி படத்தின் நாயகியாக நடித்து வருகிறார்.

மமுட்டியுடன் இணைந்து நடித்து வருவது குறித்து ஐஸ்வர்யா மேனன் பேசியதாவது..

“நான் மம்முட்டியின் தீவிர ரசிகை. அவர் படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா, என்று கனவு கண்டு காத்திருந்திருக்கிறேன். அந்தக் கனவு ‘பஸூகா’படத்தின் மூலம் நனவாகி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவருடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். மிக முக்கியமான, கதைக்கு திருப்பம் தரும் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன்.

படப்பிடிப்பில் மிக எளிமையாக, அவர் பழகும் விதம் நெகிழச் செய்கிறது. அவருடன் இணைந்து நடிப்பது வாழ்வின் மறக்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது. இப்படம் கமிட் ஆன பிறகு வரிசையாக அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து அழைப்பு வருகிறது.’ என்றார்.

‘பஸூகா’படத்தினை அறிமுக இயக்குநர் டீனோ டென்னிஸ் இயக்க, தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.