கடலூரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம், ஜோதி. இப்படம் குறித்து இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா கூறியதாவது,
இப்படம் ஒரு உண்மை சம்பவம் மட்டுமில்லாமல், பல உண்மை சம்பவங்களை உள்ளடக்கியது. வருஷத்துக்கு 40,000 குழந்தைகள் தொலைந்து அதில் 11,000 குழந்தைகள் கண்டுபிடிக்க படாமலே போகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 173 குழந்தைகள் காணாமல்போகிறது. இப்படம் ஒரு ஆணோட கோபத்தைவிட ஒரு பெண்ணோட அமைதி ரொம்ப ஆபத்தானது என்று நிச்சயமாக உணர்த்தும். வரும் ஜூலை 28 அன்று ஜோதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்று கூறினார்.
தயாரிப்பாளர் SP ராஜாசேதுபதி கூறியதாவது,
இந்த உண்மை சம்பவத்தை அறியும் போது இதை படமாக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். திரைப்படக்கல்லூரியில் AV கிருஷ்ண பரமாத்மா இயக்கிய குறும்படத்தை பார்த்து இருக்கிறேன். மிகவும் சிறப்பாக இருந்தது. அதனால் இந்த சம்பவத்தை எழுதி இயக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேன். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. என்று கூறினார்.