பிரபாசால் தள்ளிப்போகும் ‘காப்பான்’ ரிலீஸ்!

‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, சயீஷா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி ஆகியோர் நடித்துள்ள அதிரடி ஆக்‌ஷன் படம் ‘காப்பான்’. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘காப்பான்’ தெலுங்கில் ‘பந்தோபஸ்த்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

பிரபாஸ், ஷ்ரத்தா நடிக்க சுஜித் இயக்கத்தில்  தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மிக பிரம்மான்டமாக  உருவாகியுள்ள ‘சாஹோ’. படமும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாவதால் தெலுங்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சூர்யாவின் ‘காப்பான்’ படத்தை வெளியிட தயக்கம் காட்டியுள்ளனர்.

https://youtu.be/r6pE_WZLY1Y

இதனால் விநியோகஸ்தர்களின் விருப்பப்படி ‘காப்பான்’, ‘பந்தோபஸ்த்’ படங்களின் வெளியீட்டு தேதி தற்போது செப்டெம்பர் 20 ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.