ரஜினியை நக்கல் செய்யும் ‘ஜெயம்’ ரவியின் படம்!

‘ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,சம்யுக்தா  ஆகியோர் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள படம் ‘கோமாளி’. வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். பல வருடங்களாக கோமாவில் இருப்பவருக்கு நினைவு திரும்பும் போது அவரை சுற்றி மாறியுள்ளவற்றை அவரால் எதிர் கொள்ள முடியாமல் போராடுவதும் பின்னர் எப்படி சகஜமான நிலைக்கு திரும்புகிறார் என்பது தான் இப்படத்தின் கதை.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘கோமாளி’ படத்தின் டிரைலர் நேற்று வெளிடப்பட்டது. அதில் ஒரு காட்சியில் கோமா நிலையில் இருக்கும் ‘ஜெயம்’ ரவி, யோகி பாபுவிடம் ‘இது எந்த வருடம்.. என கேட்க..’ அதற்கு அவர் ‘இது.. 2016.’. என சொல்லி டிவியை ஆன் செய்கிறார். அதில் ரஜினிகாந்த் ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என ரசிகர்களிடம் பேசும் காட்சியை பார்க்கும் ஜெய்யம் ரவி இல்ல.. இது ‘1996 நான் நம்பமாட்டேன்..’ என சொல்கிறார். இதில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேஷத்தை நக்கல் அடிக்கும் படியான காட்சி அமைப்பால் உருவான சர்ச்சையின் காரணமாக கோமாளிப் படத்தின் டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே 16 லட்சத்திற்கு மேல் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

 

இந்நிலையில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் #BoycottComali @RajnikanthEFans என்ற ஹேஷ்டேக்கை  உருவாக்கி கோமாளி படத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.