‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ – விமர்சனம்!

நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு விஜய்சேதுபதி – நயன்தாரா மீண்டும் இணைய, விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்கியிருக்கும் படம், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இவர்களுடன் சமந்தாவும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா? இல்லையா? பார்க்கலாம்.

விஜய்சேதுபதி பிறந்த, முதல் நாளிலேயே துரதிர்ஷ்டம் அவர் தோளில் ஏறி சவாரி செய்கிறது.  வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையே பார்த்திராத ஆள். அவர், பகலில் டாக்ஸி டிரைவராகவும் இரவு நேர பப்பில் பவுன்சராகவும் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நயன்தாராவும் சமந்தாவும் விஜய்சேதுபதிக்கு அறிமுகமாகிறார்கள். காலையில் நயன்தாராவுடனும் இரவில் சமந்தாவுடனும் ஜாலியாக சுற்றும் விஜய் சேதுபதியை இருவருமே காதலிக்கிறார்கள். இவர்கள் இருவரில் விஜய்சேதுபதி, ஒருவரை கைபிடிக்கிறாரா? இல்லை இருவரையும் கைபிடிக்கிறாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. மற்றும் ட்விஸ்ட் க்ளைமாக்ஸ்!

காதல், பாசம், வெறுப்பு என அனைத்து ஏரியாக்களிலும் ஆல்ரவுன்டராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. ரகளை.. ரகளை…!

முழுசா இருந்த நயன்தாரா மூன்ல ஒரு பங்கா சுருங்கி போயிருக்காங்க தோற்றப் பொலிவில். அவரது கதாபாத்திரத்திற்கு ( நயன்தாராவுக்கு ஸ்பெஷல் சைல்ட் தம்பி , தங்கை மற்றும் கடன் ) அது பொருந்திப்போனாலும் ரசிகர்களுக்கு வருத்தமே. ஆனால் நடிப்பிலும் குறும்பு பேச்சிலும் அதே லேடி சூப்பர் ஸ்டார்!

குளு.. குளு.. சமந்தா, சம்மருக்கு கிடைத்த ரொமான்டிக் பலூடா…. இவருக்காக இன்னொருவாட்டி கூட படத்தைப் பார்க்கலாம்.

அனிருத்தின் பின்னணி இசையும், பாடல்களும் விக்னேஷ் சிவன் திரைக்கதைக்கு பெர்ஃபெக்ட் மேட்ச்!

சமந்தாவும், நயன்தாராவும் க்ளைமாக்ஸில் எடுக்கும் முடிவு, ட்விஸ்ட்டோ ட்விஸ்ட்!

வழக்கம்போல் விக்னேஷ் சிவன் லாஜிக் மீறல்களை அன்புடன் அரவணைத்து, ஒரு பக்கா ரொமான்டிக் கமர்ஷியலை கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்தின் ‘வீரா’ படத்தை நினைவு படுத்துகிறது, காத்து வாக்குல ரெண்டு காதல்!