விஷாலின் இரும்புத்திரை படத்தை வெளியிட போராடியவர், பி.டி.செல்வகுமார் – நடிகை கஸ்தூரி!

 கொரோனா என்ற கொடிய சூழலிலும் அரசின் ஊரடங்கின் போதும் தொடர்ச்சியாக ஏழை எளிய மக்களோடு  களத்தில் இறங்கி 101 நாட்கள் தொடர்ச்சியாக உதவி புரிந்த கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் இன்று சென்னை வடபழனி சிகரம் ஹாலில் வைத்து 101 வது நாள் நிகழ்வாக 101 ஏழை பெண்களுக்கு சிறு தொழில் செய்ய தையல் மிஷின், காய்கறி, பழ கடைகள் வைக்க தள்ளு வண்டிகள், இட்லி கடை வைக்க உபகரணங்கள் என பல்வேறு உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் நடிகை கஸ்தூரி  நடிகை கஸ்தூரி பேசியதாவது..

101 வது நாள் கொரோனா உதவி கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. யாருமே வெளிவராத நேரத்தில் எப்படி இவ்வளவு துணிச்சலாக உயிருக்கு பயப்படாமல், குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் அப்பாடா பி.டி. செல்வகுமார் சார் “ஹன்ட்ஸ் ஆப் யு ” எனக்கு தெரிந்து இந்தியாவிலேயே இப்படி ஒரு  உதவி செய்தது யாருமே இருக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறேன்..

 இவ்வளவு  பெரிய அற்புதமான உதவிகள். இன்றும் 101 வது  நாள் நிகழ்வாக 101 ஏழை பெண்களுக்கு சிறு தொழில்  செய்ய உதவிகள், அதாவது தையல் மிஷின், பூக்கடை, பெட்டி  கடை, நடைபாதை கடை வைக்க உதவிகள், மீன் வாங்கி கொடுப்பதற்கு பதில்  மீன் பிடிக்க கற்று கொடுப்பது சிறந்தது என்பதை போல ஏழை பெண்கள் சுய தொழில் செய்ய  இவ்வளவு பெரிய உதவிகளை வழங்கியுள்ளார்.

.சினிமா துறை என்றாலே சினிமா துறையா என முகம் சுளிக்கும்  எங்க சினிமா துறையில் இப்படி ஒரு மனிதரா பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது, இதை சொல்லி கொள்ள பெருமை படுகிறேன், கர்வ படுகிறேன் .விஜய்யை வைத்து புலி படம் எடுத்த தயாரிப்பாளர் இந்தளவுக்கு பண்றார் என நினைக்கும்  போது  எனக்கு சொல்ல வார்த்தைகள் வரவில்லை.  ஒவ்வொரு  தடவை உதவிகள் வழங்கும்  போது செல்வகுமார் சார் என்னை கூப்பிடுவார்.  ஆட்டோ ஓட்டும் பெண்கள், ஆட்டோ ஓட்டும் ஆண்கள், தோட்ட தொழிலாளர்கள், நடை பாதை வியாபாரிகள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், கிராம பூஜாரிகள், இசை கலைஞர்கள், சித்தாள்கள்,கட்டிட தொழிலாளர்கள்,பர்மா அகதிகள், இலங்கை அகதிகள்,ஏழை பெண்கள் என பலதரப்பட்ட  மக்களுக்கு  பகுதி வாரியாக பிரித்து  பிரித்து பல உதவிகள்,அவர் இதற்கு  எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும்,இந்த கொரோனா காலத்தில் பயம் வேற  என்பதை தாண்டி, பணத்திற்கு என்ன செய்கிறார் , அவர் சாதாரண ஒரு மனிதன்,  மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் புலி மாதிரி வந்து நிற்கிறார் அது  தான் எனக்கு அவரிடம் பிடித்த முக்கியமான விஷயம். மிகவும்  நல்ல கேரக்டர். அவர் திரை துறையில் மட்டுமல்லாமல் இன்னும் பல துறைகளில் சாதனைகளை  செய்ய வேண்டும் .

இந்த மாதிரி துணிச்சல் உள்ளவர்களை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க. மிக பெரிய தொண்டுள்ளம் கொண்ட செல்வகுமார் சாருக்கு மிக பெரிய எதிர் காலம் இருக்கிறது என்பது என் கருத்து.  ஏன்னா இந்த உலகத்தில் மக்கள் என்ன செய்றாங்க என் பார்த்தால்  நல்லவங்களையெல்லாம்  விட்டுருவாங்க.. தப்பு செய்றவங்களுக்கு  முக்கிய பொறுப்புகளை கொடுத்துருவாங்க.தயவு செய்து இனி வரும் ஜெனரேசன்  இளைஞர்கள்  யாராக இருந்தாலும் சரி

 பி.டி. செல்வகுமார் போன்று களமிறங்கி வேலை  செய்வர்களின் வெற்றிக்கு உறுதுணையாக ,பக்க பலமாக இருந்து,அவருடைய வெற்றிக்காக போராடுங்க அப்ப தான் நாட்டில் நல்ல சமுதாயம் , எதிர் காலத்தில் நல்ல இளைஞர்கள்  வருவாங்க..கெஜரிவால்  மாதிரி நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என்றால்   பி.டி. செல்வகுமார்  மாதிரி தான் வருவாங்க . நம்ம தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நாம் தான் ஊக்க படுத்த வேண்டும் உற்சாகம் கொடுக்க வேண்டும்.. நான் ஹைதராபாத்தில் இருந்து விட்டு இப்படி ஒரு நல்ல விழாவில் கலந்து கொண்டதற்கு  பெருமை படுகிறேன்.

இதை விட முக்கியமான விஷயத்தை நான் கூறி கொள்ள கடமை பட்டுள்ளேன் , இந்த கொரோனா  காலத்திலும் தினமும் 100 கட்டிட தொழிலாளிகளுக்கு வேலை கொடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மருந்துவாழ் மலையில்  ஸ்ரீ குபேர தியான மண்டபம் ஒன்றையும் கட்டி கொடுத்து விட்டார் எனவும் அறிந்தேன். நானும் அங்கு விரைவில் செல்ல இருக்கிறேன்.

இப்படி 101 நாட்கள் என்றில்லாமல்  சினிமா துறையில் அவர் அற்புதமான வேலைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார். நாம படம் பண்ணுனோம், நம் குடும்பத்தை பார்த்தோம் என்றில்லாமல் இதுவரை  100 படங்களுக்கு மேல் ரீலீஸ் செய்து கொடுத்திருக்கிறார். நான் கேள்விப்பட்டது என்னென்ன தென்மேற்கு பருவக்காற்று , காவலன், தாமிர பரணி, தலைவா, கருப்பன், சிம்புவின் வாலு என 100  படங்களுக்கு மேல் வெளிவர விடிய விடிய இருந்து பிரச்சினைகளை  முடித்து ரீலீஸ் செய்து கொடுத்து விடுவாராம்.

 நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது  அவருடைய இரும்புத்திரை படம் மோசமான சிக்கலில் இருந்த போது   தாடலாடியாக எங்க, எப்படி , நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்படி நடவடிக்கை எடுத்து,சாதுரியமாக பேசி அந்த படம் ரிலீஸ ஆக துணிச்சலுடன் போராடியவர்,  அந்த படம் ரிலீசாகி படம் மிக பெரிய வெற்றி பெற்றது.. இப்படி ஒரு படம் ரிலீசாகவேண்டும் என்றால் எதையும் செய்வேன் என போர்க்குணம் கொண்ட

 பி.டி. செல்வகுமார் துணைதலைவர் பதவிக்கு டி. ஆர். அணியில் போட்டியிடுகிறார்  என கேள்விப்பட்டேன்.  இப்படி பட்ட நல்ல உள்ளம் கொண்ட பி. டி.செல்வகுமார் போன்றவர்கள் துணை தலைவர் பதவிக்கு வந்தால் இந்த சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் , திரை துறைக்கும் மிகவும் நல்லது செய்வார் என்பது என் கருத்து. நான் கேள்விப்பட்டதையும், பார்த்ததையும் வைத்து சொல்கிறேன்

இதுவரை பி.டி. செல்வகுமாரால்  யாருக்கும் எந்த பிரச்னையும் வந்தது கிடையாது என்பதும், எந்த படத்திற்குள் வந்தாலும் அதில் உள்ள பிரச்னைகளை சாதுர்யமாக முடித்து கொடுத்து விடும் தன்மையும், அனைவருடனும் அரவணைப்பாக செல்லும் குணமும்  கொண்ட Mister Clean பி.டி. செல்வகுமார் .அவர் செய்யும்  இந்த விழாவில்  101 வது  நாளில் 101 ஏழை பெண்களுக்கு உதவி செய்வதில் நான் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி .அவருக்கு கடவுள் அனுக்கிரகம்  செய்வார். என பேசினார்.