கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்து வருபவர்,கார்த்தி. தற்போது இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணைகிறார். வித்தியாசமான கதை அமைப்பில் உருவான ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் P.S.மித்ரனுடன் கார்த்தி இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் ‘புரொடக்ஷன் 4’ படைப்பாக பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.
பிரமாண்டமான ஆக்ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.