பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திரு.G.N.அன்புசெழியன் அவர்களின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் அவர்கள் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர் கோபுரம் சினிமாஸின் உரிமையாளர். தீபாவளி திருநாளாகிய இன்று மூன்று திரையரங்குகள் அடங்கிய “கோபுரம் சினிமாஸ்” மதுரை மல்டிபிளக்ஸை திறந்து வைத்தார்.
தீபாவளி தினமான இன்று வெளியாகும் புதிய படங்களை “கோபுரம் சினிமாஸ்” திரையரங்குகளில் திரையிட்டு இதன் சேவையை துவக்குகிறார். மேலும் தமிழகமெங்கும் பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.
“கோபுரம் சினிமாஸ்” நிறுவனத்தின் உரிமையாளரான செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீண்ட வரலாறு பொருந்திய ராஜ் திரையரங்கத்தையும் ஆறு திரைகள் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டராக மாற்ற முடிவெடுத்துள்ளார்.
மேலும் வரும் காலங்களில் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தரமான சிறந்த படங்களையும் தயாரிக்க உள்ளார். இதற்காக பல முன்னனி கதாநாயகர்களிடம் கதை விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
“கோபுரம் சினிமாஸ்” நிர்வாக உரிமையாளர் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் கூறுகையில், ‘மதுரை மக்களுக்கு நல்ல படம் பார்க்கும் அனுபவத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதும், எங்கள் மல்டிபிளக்ஸ்ற்குள் வருபவர்களுக்கு நல்ல பாதுகாப்பையும், தரமான உணவையும் கொடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல் தூய்மையான சூழ்நிலையையும் உருவாக்கி தருவதே எங்களுடைய மகத்தான நோக்கமாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.
“கோபுரம் சினிமாஸ்” மல்டிபிளக்ஸ் – சிறப்பம்சங்கள்
அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் முதல்முறையாக மதுரையில் நவீன ‘டால்பி’ தொழில் நுட்பத்துடன் Laser Projector, 4 Way Speaker, 3D Projection மற்றும் அகன்ற திரை வசதி கொண்ட 3 திரைகளுடன் பிரம்மாண்ட கோபுரமாய் “கோபுரம் சினிமாஸ்” உருவெடுத்துள்ளது.
அன்னிய தேசங்களின் தொழில் நுட்பங்களை மொத்தமாக உள்ளடக்கி புத்தம்புது பொலிவுடன் காட்சியளிக்கும் Interiors, மின்விளக்குகள் மற்றும் மிகப்பிரம்மாண்டமாக கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் Video Wallஐ மக்களுக்காக படைத்துள்ளது.
மக்களின் பாதுகாப்பிற்காக நவீன கேமிராக்கள் மற்றும் பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை கோபுரம் சினிமாஸ் நியமித்துள்ளது. மேலும் மின் தடங்கல் இல்லாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மக்களின் வசதியை கருதி பிரம்மாண்ட பரப்பளவுள்ள கார் பார்க்கிங் மற்றும் பைக் பார்க்கிங்கை உருவாக்கியுள்ளது.
மேலும் மிக முக்கிய அம்சமாக மதுரையில் எங்கும் இல்லாத அளவிற்கு Customer Care வசதி மற்றும் இலவச WiFi வசதியையும் ஏற்படுத்தியுள்ளது