இந்தியாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞர்களில் ஒருவரான பண்டிட் பிர்ஜூ மகராஜ், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 83.
பத்ம விபூஷன் விருது பெற்ற பண்டிட் பிர்ஜூ மகராஜ் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தில் இடம் பெற்ற “உனைக் காணாது நான்” என்ற பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றவர்.
பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைவு குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது…
ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார். ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும், விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.
இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’
–திரு. கமல்ஹாசன்