Kathir’s ‘Jada’ set to release on December 6 – ‘ஜடா’ உருவாக்கப் போகும் ஃபுட்பால் ஃபீவர்!
கதிர், ரோஷினி பிரகாஷ் , சுவாஸ்திகா ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ள படம் ‘ஜடா’.
ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப்படத்தை ‘The poet studios’ தயாரித்துள்ளது. வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகிறது.
கதிர் ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் சினிமா ரசிகர்களிடமும், ஆர்வலர்களிடமும் தனிக்கவனம் பெற்றிருப்பவர்.
ஒரு ஸ்ட்ரீட் ப்ளேயரிடம், நேஷ்னல் அளவில் விளையாடும் ப்ளேயரின் அளவிற்கு திறமை இருக்கும். ஆனால், அந்த ப்ளேயர் பொருளாதார காரணங்களால் விளையாட முடியாத சூழ்நிலை.
அதனுடன் மேலும் சில வித்தியாசமான விசயங்களை உள்வைத்து படத்தை எடுத்திருக்கிறார்களாம். அவசியம் படம் பாருங்க. அனைவருக்கும் பிடிக்கும்” என்கிறார் இயக்குனர் குமரன்.
‘ஜடா’ படம் குறித்து கதிர் பேசியதாவது,
“புஷ்கர் காயத்ரி மேடம் பசங்க எல்லாரும் சேர்ந்து படம் பண்ண எப்படி இருக்குமோ அதுதான் ஜடா. குமரன் அற்புதமான கிரியேட்டர் . துளியும் ஈகோ இல்லாத டைரக்டர்.
இந்த மாதிரி ஒரு டீம் அமைவது முக்கியம். சாம்.சி எஸ் இசை படத்திற்கு முக்கியமாக அமைந்துள்ளது. ஜடா ஒரு யூசுவல் படம் கிடையாது. படத்தில் நிறைய ப்ளேவர்ஸ் இருக்கு..நிறைய எமோஷன் இருக்கும். அதுதான் எனக்கு மிகவும் பிடித்தது.
இண்டெர்நேஷனல் புட்பாலுக்கும் ஸ்ட்ரீட் புட்பாலுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் நிறைய இந்தப்படத்தில் இருக்கும்.
பிகில் படமும் புட்பால் இந்தப்படமும் புட்பால் என்று நிறையபேர் கேட்கிறார்கள். அந்தப்படம் வேற இந்தப்படம் வேற. சாம்.சி எஸ் இசையை பெரிய ஸ்கிரீனில் படத்தோடு கேட்கும் போது பிரம்மிப்பாக இருந்தது.
குமரன் சூர்யா இருவரின் காம்பினேஷன் தான் விஷுவல்ஸ் எல்லாம் சூப்பரா இருக்க காரணம். இது ஒரு கிரேட் டீம் ஒர்க்” .
இந்தப்படம் வெளியான பிறகு ஃபுட்பால் விளையாட எல்லோருக்கும் ஆசை வரும்.’ என்கிறார் கதிர்.