இனோவேட்டிவ் பிலிம் பெஸ்டிவலுக்கு ‘கட்டில்’ திரைப்படம் தேர்வு!

மேப்பிள் லீஃப்ஸ்  புரொடக்சன்ஸ் தயாரிப்பில்  இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்து ஆடியோ ரிலீசுக்கு தயாராகி வரும் கட்டில் திரைப்படம் பெங்களூரில் நடைபெற்று கொண்டிருக்கும் இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இன்று மதியம் பேங்களூர் 15.10.2021 இன்னோவேட்டிவ் மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாகத்தில் ஸ்கிரீன் 6ல் கட்டில்  திரைப்படம் உலக திரைப்பட ஜாம்பவான்கள் மத்தியில் திரையிடப்படுகிறது

சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார்.

விரைவில் தியேட்டரில் வெளியாக இருக்கும் கட்டில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கட்டில் திரைப்பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்