கவிஞர் பிறை சூடன், திரைத்துறையில் நடந்தால் இரண்டடி, ஆட்டமா தேரோட்டமா, சைலன்ஸ் காதல் செய்யும் நேரமிது..உள்ளிட்ட சுமார் 2000 பாடல்களையும், 5000 மேற்பட்ட பக்தி பாடல்களையும் எழுதியவர். இவர் சிறந்த ஆன்மீகவாதியும், இலக்கியவாதியுமாவார்.
அவருக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளுடன் உள்ளனர். இவர்களுடன் வசித்து வந்த பிறைசூடனுக்கு இன்று 8.10.2021 மாலை ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக அவரது உயிர் பிரிந்தது.
பிறைசூடனின் மகன் தயா பிறைசூடன் இசையமைப்பாளராக உள்ளார். திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பிறைசூடன் செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.