விருதுகளை வென்ற கயிறு மார்ச் 13ல் வெளியீடு!

இயக்குநர் ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள திரைப்படம் கயிறு . ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரித்து நடித்துள்ளார் குணா. இவருடன் காவ்யா மாதவ், கந்தசாமி, சேரன்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மார்ச் 13 அன்று வெளியாகிறது.

இப்படம் உலகம் முழுவதும் நடந்த 20 திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்றுள்ளது.

‘கயிறு’ படத்தின்  இயக்குநர் கணேஷ் , விஜய் – ஷாலினி நடிப்பில் வெளியான  ‘காதலுக்கு மரியாதை’ மற்றும் வினயன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘காசி’ ஆகிய படங்களின் இணை இயக்குநராக பணிபுரிந்துள்ளது குறிப்பிடதக்கது.

 குறித்து இயக்குநர் கணேஷ் கூறியிருப்பதாவது:

என் படம் மூலமாக சில பொருத்தமான விஷயங்களை பதிவு செய்திருக்கிறேன். நமது கலாச்சாரம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பொக்கிஷம் என்பதை அழுத்தமாக கூறியுள்ளேன். அதை போற்றி பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தை மாற்றவேண்டும் என்பதையும் இப்படம் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறது.  பல்வேறு சமூக கருத்துக்களை தன்னுள் கொண்டிருக்கிறது, அனைத்து வகையான ரசிகர்களும் ரசிக்கும்படியான படமாகவும் இது இருக்கும் என்றார்.