கழுவேத்தி மூர்க்கன் – விமர்சனம்!

இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். அங்கே, மேலத்தெருவில் வசிக்கும் அருள்நிதியும், கீழத்தெருவில் வசிக்கும் சந்தோஷ் பிரதாப்பும் பள்ளிப் படிக்கும் காலித்திலிருந்தே நெருக்கமான உயிர் நண்பர்கள். மொத்த கிராமமும் சாதிய கட்டுப்பாடுகளுக்குள் சிக்கியிருந்தாலும் இவர்களுக்குள் எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

இந்நிலையில் அரசியல்வாதிகளான ராஜ சிம்மனும், அருள்நிதியின் அப்பாவுமான யார் கண்ணனும் தங்களது அரசியல் சுயநலத்திற்காக, சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்கின்றனர். அந்த கொலைப் பழியை அருள்நிதி மேல் சுமத்துகின்றனர்.  இதனால் கிராமத்தில் இருபிரிவினருக்கிடையே சாதி சண்டை நடக்கிறது. போலீஸார் அருள்நிதியை சுட்டுக்கொல்ல முடிவு செய்கின்றனர். அருள்நிதி செய்தார்? என்பது தான் ‘கழுவேத்தி மூர்க்கன்’.

அருள்நிதி பெரிய முறுக்கு மீசையுடன் மூர்க்கன் சாமி என்ற கிராமத்து இளைஞராக நன்றாகவே நடித்திருக்கிறார். நண்பன் சந்தோஷ் பிராதாப்புடனும், காதலி துஷாரா விஜயனிடமும் பரிவு காட்டி, சண்டைக்காட்சிகளில் மிரட்டுகிறார்.

பூமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் சாந்தமாக நடித்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.

கிராமத்து பெண்ணாக துஷாரா விஜயனின் நடிப்பும், குறும்பு பேச்சும் ரசிக்க வைக்கிறது.

அரசியல்வாதிகளாக நடித்திருக்கும் யார் கண்ணன், ராஜசிம்மன் இருவரின் நடிப்பும் சிறப்பு ஐஜத்தில் உலாவரும் அரசியல்வாதிகளை நினைவு படுத்துகின்றனர்.

உண்மை மட்டுமே பேசும் வக்கீலாக நடித்திருக்கிறார், முனிஷ்காந்த்.  இவர், பேங்க் மேனேஜரிடமும், போலீஸ் எஸ் பியிடம் பேசும் வசனங்கள், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

போலீஸ் எஸ் பியாக, சிறப்பாக நடித்திருக்கும் சரத் லோகித்சவா, மிரட்டலான நடிப்பின் மூலம் போலீஸூக்கு கன்னியம் சேர்த்திருக்கிறார்.

ஸ்ரீதரின் ஒளிப்பதிவு, சிறப்பாக இருக்கிறது.

டி.இமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை! பின்னணி இசை சில இடங்களில் காட்சிகளுக்கு பலமாக அமைந்திருக்கிறது.

இருவேறு சாதிகளுக்குள் நடந்து வரும் மோதலை, சரி சமமாக காட்ட முயற்சித்திருக்கும் இயக்குநர் சையத். கௌதம ராஜ், ஒரு சில காட்சிகளில் ஒரு சாதியை சற்று உயர்த்தியே பிடித்திருக்கிறார்.

‘கழுவேத்தி மூர்க்கன்’ – சாதிய அரசியல்!

 

ரேட்டிங்  2.5/5