ஜப்பான், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ், படங்களுடன் வெளியான லஞ்ச பூமி!

தமிழ்சினிமாவில் எப்போதுமே பெரிய படங்கள் வெளியாகும் வேளையில், சில சிறிய படங்களும் வெளியாகும். அப்படித்தான் இந்த தீபாவளிக்கு வெளியான ஜப்பான் , ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 2 , ரெய்டு  போன்ற பெரிய படங்களுக்கு இடையில் சின்னப் படங்களான கிடா, லஞ்ச பூமி போன்ற சிறிய படங்களும் வெளியாகியது.

இந்நிலையில், தீபாவளிக்கு வெளியான பெரிய பட்ஜெட் படங்களில் விமர்சன ரீதியாக ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படமும், ‘ஜப்பான்’ வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை பெற்று வருகின்றன.

சிறிய பட்ஜெட் படங்களில், கிடா படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று வந்த நிலையில், லஞ்ச பூமி – Https://www.moviewood.io யில் வெளியாகியிருக்கிறது.

Https://www.moviewood.io  ஓடிடி யில் வெளியான லஞ்ச பூமி என்ற திரைப்படத்தினை இயக்குனர் பட்டுராம் செந்தில் இயக்கியிருக்கிறார். லஞ்ச பூமி  இன்றைய  சூழலையும்  ஊழலையும், தோலுரித்துக் காட்டும் படம், சமூக பார்வையுடனும்  சாமானியர்களின் வலியையும் பதிவு செய்கிறது என்கிறார் படத்தின் இயக்குனர், பட்டுராம் செந்தில். இவர்  கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கிருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரங்களில், ஆதேஷ்பாலா – கே கே பாலா – அனு கிருஷ்ணா – சாசனா ரோஸ் – திருச்சி பாபு – சேரன் ராஜ் – அமிர்தலிங்கம் – நாமக்கல் குணா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர்.

லஞ்ச பூமி  படத்தில் ஜிவி பிராகஷ் ஒரு பாடல் பாடியுள்ளார். மகாலிங்கம் & பாம்பே பாக்யா & திவாகர் போன்ற முன்னணி பாடகர்கள் இப்படத்தில் பாடியுள்ளார்.