பரத் – வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படம்!

தமிழ்த் திரையுலகில் தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பரத். ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’  படத்தின் மூலம் நடிகராக தனது பயணத்தை தொடங்கி பல வெற்றி படங்களை அளித்த நடிகர் பரத் நடிக்கும் 50வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

திரில்லர் கலந்த பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். R P பிலிம்ஸ் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது. விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய R.P.பாலா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.